/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்களின் கேள்விக்கு பதில் இல்லை: கிராம சபை கூட்டத்தில் காரசாரம்
/
மக்களின் கேள்விக்கு பதில் இல்லை: கிராம சபை கூட்டத்தில் காரசாரம்
மக்களின் கேள்விக்கு பதில் இல்லை: கிராம சபை கூட்டத்தில் காரசாரம்
மக்களின் கேள்விக்கு பதில் இல்லை: கிராம சபை கூட்டத்தில் காரசாரம்
ADDED : ஜன 26, 2024 11:35 PM

கிணத்துக்கடவு,: கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள, 34 ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், நல்லட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள, நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் கிராம சபை கூட்டம், ஊராட்சி தலைவர் கார்த்திகா தலைமையில் நடந்தது.
இதில், ஊராட்சி செயலாளர் ராணி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வரவு செலவு கணக்குகள் படிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் பேசியதாவது:
10 ஆண்டுகளாக நல்லட்டிபாளையம் - பட்டணம் ரோடு சீரமைக்கப்படாமல் உள்ளது. இதை சரி செய்யக்கோரி கிராம சபை கூட்டங்களில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தற்போது வரை ரோடு சீரமைக்கவில்லை.
அங்கன்வாடி மையம் தரை பகுதி சேதம் அடைந்துள்ளது. நல்லட்டிபாளையம் ஊராட்சியில் தண்ணீர் பற்றாகுறையால் சில குடியிருப்புகளில், காசு குடுத்து தண்ணீர் வாங்குகிறோம். துாய்மை பணியாளர்கள் முறையாக குப்பையை பெறுவதில்லை. குறிப்பாக, குடியிருப்பு பகுதியில் குப்பை அகற்றுவதில்லை. சுகாதார பாதிப்பு நிலவுகிறது.
மேலும், பட்டணம் பகுதியில் நீண்ட நாட்களாக கொசு மருந்து அடிப்பதில்லை. ஊராட்சியில் முறையாக அடிப்படை வசதிகள் பூர்த்தியாகவில்லை. இவ்வாறு, பேசினர்.
பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளை பட்டியலிட்டு பேசினர். பெரும்பாலான கேள்விகளுக்கு அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்க முடியாமல் திணறினர்.

