/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மிளகு சாகுபடி கருத்தரங்கு 100 விவசாயிகள் பங்கேற்பு
/
மிளகு சாகுபடி கருத்தரங்கு 100 விவசாயிகள் பங்கேற்பு
மிளகு சாகுபடி கருத்தரங்கு 100 விவசாயிகள் பங்கேற்பு
மிளகு சாகுபடி கருத்தரங்கு 100 விவசாயிகள் பங்கேற்பு
ADDED : ஏப் 28, 2025 11:05 PM
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே மிளகு சாகுபடி குறித்து கருத்தரங்கம் நடந்தது.
ஈரோடு சமவெளி மிளகு சாகுபடியாளர்கள் சங்கம் மற்றும்ஆழியாறு எஸ்.எஸ்., பார்ம்ஸ் சார்பில் கருத்தரங்கம் ஆழியாறில் நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி இயற்கை விவசாயி மது ராமகிருஷ்ணன், ஆழியாறு அறிவுத்திருக்கோவில் அருள்நிதி ராஜசேகரன் ஆகியோர் பேசினர்.
மிளகு சாகுபடி குறித்து விவசாயி செல்வம், நுண்ணுயிர் குறித்து கனகசபாபதி, ஜாதிக்காய் சாகுபடி பற்றி ரத்தினசபாபதி, பல அடுக்கு பண்ணை அமைத்தல் குறித்து டாக்டர் மூர்த்தி விளக்கினர். தொடர்ந்து, விவசாயிகளுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.