/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேயிலை எஸ்டேட்களில் குறுமிளகு சீசன் துவக்கம்
/
தேயிலை எஸ்டேட்களில் குறுமிளகு சீசன் துவக்கம்
ADDED : ஜன 26, 2025 11:13 PM

வால்பாறை, ;வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்களில், குறுமிளகு சீசன் துவங்கியுள்ளது.
வால்பாறை மலைப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேரில், தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.
இது தவிர, சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.
குறிப்பாக, தேயிலை செடிகளுக்கு இடையே ஊடுபயிராக குறுமிளகு பயிரிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு, ஒரு முறை மட்டுமே காய்க்கும் மிளகு சீசன் தற்போது துவங்கியுள்ளது. இதனால், எஸ்டேட் பகுதியில் பயிரிடப்பட்ட குறுமிளகை தொழிலாளர்கள் பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் தேயிலை செடிகளுக்கு இடையே பயிரிடப்பட்ட மிளகு செடிகளில் தற்போது காய் காய்த்துள்ளது.
இதனை பறித்து வெயிலில் நன்றாக உலர்த்தி, விற்பனைக்காக வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஒரு கிலோ மிளகு தற்போது, ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த ஆண்டு சீதோஷ்ண நிலையில் நல்ல மாற்றம் உள்ளதால், மிளகு உற்பத்தியும் அதிகமாக உள்ளது,' என்றனர்.