/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலைக்குழுவின் ஒயிலாட்டம் அரங்கேற்றம்
/
கலைக்குழுவின் ஒயிலாட்டம் அரங்கேற்றம்
ADDED : பிப் 12, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரூர்:சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்ட அரங்கேற்ற விழா, நரசீபுரத்தில் நடந்தது.
நாட்டுப்புற கலையான ஒயிலாட்டத்தை, இளைய தலைமுறையிடம் எடுத்து செல்லும் விதமாக, பல கிராமங்களில் அரங்கேற்றம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், நரசீபுரம் தர்மராஜர் கோவிலில் ஒயிலாட்டக்குழுவினரின் அரங்கேற்றம் நேற்று நடந்தது. கரும்மத்தம்பட்டி சங்கமம் கலைக்குழு சார்பில் நடந்த, 63வது ஒயிலாட்ட அரங்கேற்றத்தில், முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.
தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் தலைமையில், புதிதாக கற்ற, 116 பேரின் ஒயிலாட்ட அரங்கேற்றம் நடந்தது. இதில், கிராம மக்கள் திரளாக பங்கேற்று, கிராமிய கலையை ரசித்தனர்.

