/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கர்நாடக இசை, பரத நாட்டியம் அரங்கேற்றம்
/
கர்நாடக இசை, பரத நாட்டியம் அரங்கேற்றம்
ADDED : அக் 03, 2024 08:23 PM

கோவை:
பாரதிய வித்யா பவன் கேந்திரா சார்பில், வீணை இசை, வாய்பாட்டு, மிருதங்க இசை மற்றும் பரதநாட்டியம் பயின்ற மாணவர்களுக்கான அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.
பாரதிய வித்யா பவன் கோவை கேந்திரா இயக்குனர் உஷா ராஜாராம் கூறுகையில், ''பாரதிய வித்யா பவன் பைன் ஆர்ட்ஸ் பயிற்சி மையத்தில், இசை மற்றும் நடனம் பயிலும் மூன்றாமாண்டு டிப்ளோமா மாணவர்களின் அரங்கேற்றம் நிகழ்ச்சி நடந்தது.
இந்த மாணவர்கள் கர்நாடக இசையை மூன்று ஆண்டுகள் முறைப்படி கற்றுள்ளனர்.
முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்த்ரி, தியாகராயர் ஆகியோர்களின் கீர்த்தனைகளையும், சங்கீத ஸ்வரங்களையும் இசை மாணவர்கள் சிறப்பாக பாடி தங்களின் திறமையை வெளிப்படுத்தி உள்ளனர்.
வீணை, மிருதங்கம், வாய்ப்பாட்டு மற்றும் நாட்டியம் ஆகிய நான்கு பிரிவுக்கான அரங்கேற்றம் முடிந்துள்ளது,'' என்றார்.