/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிரந்தர ஆதார் மையம்; பொதுமக்களுக்கு அழைப்பு
/
நிரந்தர ஆதார் மையம்; பொதுமக்களுக்கு அழைப்பு
ADDED : ஆக 14, 2025 10:22 PM
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூரில் செயல்பட்டு வரும் நிரந்தர ஆதார் மையத்தின் சேவைகளை பயன்படுத்தி கொள்ள பொதுமக்களுக்கு, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில், நிரந்தர ஆதார் பதிவு மையம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள தொண்டாமுத்தூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
இம்மையம், காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை செயல்படுகிறது. இங்கு, ஆதார் பெயர் மாற்றம், கைரேகை பதிவு செய்தல், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம், மொபைல் எண் இணைப்பு, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய ஆதார் பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் இந்த நிரந்தர ஆதார் பதிவு மையத்தின் சேவைகளை பயன்படுத்தி பயன்பெறலாம் என, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.