தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாமில் மூட்டு வலி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாமில் மூட்டு வலி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாமில் மூட்டு வலி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு


ADDED : ஏப் 04, 2025 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2025 03:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'கே.எம்.சி.எச்.,ல் நடக்கும் ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாமில், மூட்டு வலி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படுகிறது. முகாம், ஏப்., 30ம் தேதி நிறைவடைகிறது,' என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது:

மூட்டு தேய்மானம் என்பது இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை வரக்கூடிய முக்கிய பிரச்னையாக உள்ளது. 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மூட்டுகளில் தேய்மானம், வலி இருப்பின் அது விளையாடும்போது அடிபட்டதாலோ அல்லது விபத்துகளில் காயம் ஏற்பட்டதாலோ இருக்கலாம்.

40 வயதுக்கு மேல், மூட்டு ஜவ்வுகளில் சிதைவு ஏற்பட்டு தேய்மானம், ஜவ்வு தசைகள் பிய்ந்து விடும். இவ்வாறு ஏற்படும் போது, விரைவில் மூட்டு தேய்ந்து விடும். குறிப்பாக, மூட்டு பகுதியில் உள்ள மெனிஸ்கஸ் என்ற ஜவ்வு தேய்ந்து பிய்ந்து விடுவதால், மூட்டுகளில் வலி, நடக்க சிரமப்படுதல், வீக்கம் ஏற்படும்.

இப்பாதிப்புகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை மேற்கொள்வது அவசியம். பரிசோதனையில், முற்றிலுமாக எலும்பு தேய்மானம் கண்டறியப்பட்டால், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்; இதுவே நிரந்தர தீர்வாக இருக்கும்.

கே.எம்.சி.எச்.,ல் உள்ள ரோபோடிக் மூட்டு மாற்று கருவி வாயிலாக, 750க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு துணையுடன் இயங்கும் இக்கருவியில், அறுவை சிகிச்சை சுலபமாகவும், விரைவாகவும் மேற்கொள்ளப்படுகிறது. மேம்பட்ட துல்லியம், எலும்புகள் மீது இம்பிளாண்டுகள் பொருத்துதல், நோயாளியின் மூட்டு அமைப்புக்கு ஏற்றவாறு பிரத்யேக சிகிச்சை, சிகிச்சைக்குப்பின் குறைவாக வலி மற்றும் மெல்லிய திசுக்கள் பாதுகாக்கப்படுவதுடன், நோயாளிகள் விரைவில் குணமடையவும் இச்சிகிச்சைமுறை உதவுகிறது.

கே.எம்.சி.எச்.,ல் ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம், மார்ச் 1ல் துவங்கியது. ஏப்ரல் 30ம் தேதி வரை நடக்கிறது. முகாமில் பங்கேற்போருக்கு கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது.

முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு, 74188 87411என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us