/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதார நிலையத்துக்கு நிரந்தர பணியாளர் தேவை
/
சுகாதார நிலையத்துக்கு நிரந்தர பணியாளர் தேவை
ADDED : ஆக 13, 2025 07:37 PM
குடிமங்கலம்:
பராமரிப்பின்றி புதர் மண்டி காணப்படும் துணை சுகாதார நிலையத்தை புதுப்பித்து, நிரந்தரமாக செவிலியர் நியமிக்க, பெரியபட்டி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம், பெரியபட்டி, ரங்கம்மாபாளையம் சுற்றுப்பகுதி கிராமங்களில், 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் மருத்துவ தேவைக்காக, பெரியபட்டியில், துணை சுகாதார நிலையம் துவக்கப்பட்டது.
நிரந்தர கட்டடம் கட்டி, முன்பு செவிலியரும் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது, துணை சுகாதார நிலைய வளாகம் முழுவதும் புதர் மண்டி, மக்கள் செல்லவே முடியாத நிலையில் காட்சியளிக்கிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள், அரசுக்கு அனுப்பியுள்ள மனு: பெரியபட்டி துணை சுகாதார நிலையம் பூட்டியே கிடப்பதால், சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கு குறித்த நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதில்லை.
பயன்பாடு இல்லாததால், கட்டடம் மற்றும் வளாகம் புதர் மண்டி, அச்சுறுத்தும் நிலையில் உள்ளது. ஆக்கிரமிப்பும் அதிகரித்து வருகிறது.
எனவே துணை சுகாதார நிலையத்துக்கு நிரந்தர பணியாளர் நியமித்து, கட்டடத்தையும் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.