sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

லே - அவுட்களுக்கு அனுமதி தீர்மானங்கள்; நகரமைப்பு குழுவுக்கு அதிகாரமில்லையா

/

லே - அவுட்களுக்கு அனுமதி தீர்மானங்கள்; நகரமைப்பு குழுவுக்கு அதிகாரமில்லையா

லே - அவுட்களுக்கு அனுமதி தீர்மானங்கள்; நகரமைப்பு குழுவுக்கு அதிகாரமில்லையா

லே - அவுட்களுக்கு அனுமதி தீர்மானங்கள்; நகரமைப்பு குழுவுக்கு அதிகாரமில்லையா


ADDED : மார் 30, 2025 11:11 PM

Google News

ADDED : மார் 30, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாநகராட்சியில், லே-அவுட் அனுமதி தொடர்பான தீர்மானங்களை, நகரமைப்பு குழு விவாதத்துக்கு அனுப்பாமல், மாமன்ற கூட்டத்துக்கு கொண்டு வந்து, 'ஆல்-பாஸ்' முறையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

கோவை மாநகராட்சியில் நேற்று முன்தினம் மாமன்ற கூட்டம் நடந்தது. மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தனர்.

132 தீர்மானங்கள், 'ஆல்-பாஸ்' முறையில் நிறைவேற்றப்பட்டன. கவுண்டம்பாளையம் குப்பை மாற்று நிலையம், மின் மயானம் பராமரிப்பு தொடர்பாக கவுன்சிலர்கள் ஆட்சேபம் தெரிவித்த போதிலும், கருத்துக்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டன. அவற்றில், மிக முக்கியமானது, லே-அவுட்டுகளுக்கு அனுமதி வழங்கும் தீர்மானம்.

தடையின்மை சான்று கோரும் லே-அவுட் உரிமையாளர், மாநகராட்சிக்கு தானமாக வழங்க வேண்டிய, பொது ஒதுக்கீடு இடங்களை ஒப்படைத்திருக்கிறாரா; கமிஷனர் பெயருக்கு இடங்களை பத்திரப்பதிவு செய்து கொடுத்திருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு லே-அவுட்டிலும், எத்தனை சென்ட் இடம் பொது ஒதுக்கீடாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிற விபரம் தீர்மானங்களில் இடம் பெறவில்லை. மொத்தம், 28 லே-அவுட்டுகளுக்கு தடையின்மை சான்று வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இவை, நகரமைப்பு குழு கூட்ட விவாதத்துக்கு அனுப்பப்படாமல், மாமன்ற கூட்டத்துக்கு நேரடியாக கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இதற்கு, மா.கம்யூ., கவுன்சில் குழு தலைவர் ராமமூர்த்தி ஆட்சேபம் தெரிவித்து பேசுகையில், ''லே-அவுட் அனுமதி தொடர்பான தீர்மானங்களை, நகரமைப்பு குழுவுக்கு அனுப்பி, அங்கிருந்து மன்றத்துக்கு கொண்டு வர வேண்டும். சாலைகள், பொது ஒதுக்கீடு இடங்கள் தானமாக கொடுக்கப்பட்டு இருக்கிறதா என்பதை, கண்டறிய வேண்டும்,'' என்றார்.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பதிலளிக்கையில், ''லே-அவுட்டுகளை நகரமைப்பு குழுவினர் நேரில் சென்று, ஆய்வு செய்து கொள்ளலாம்,'' என்றார்.

மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் குமாரிடம் கேட்டபோது, ''லே-அவுட் அனுமதிக்கு மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றே, சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. நகரமைப்பு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என குறிப்பிடவில்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us