/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டிரெக் தமிழ்நாடு' திட்டத்தின் கீழ் மேலும் 3 வழித்தடங்களில் அனுமதி
/
'டிரெக் தமிழ்நாடு' திட்டத்தின் கீழ் மேலும் 3 வழித்தடங்களில் அனுமதி
'டிரெக் தமிழ்நாடு' திட்டத்தின் கீழ் மேலும் 3 வழித்தடங்களில் அனுமதி
'டிரெக் தமிழ்நாடு' திட்டத்தின் கீழ் மேலும் 3 வழித்தடங்களில் அனுமதி
ADDED : மே 13, 2025 11:46 PM
பொள்ளாச்சி,; 'டிரெக் தமிழ்நாடு' மலையேற்ற சுற்றுலா திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில், மேலும் மூன்று வழித்தடங்களில் மலையேற்றத்துக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வனத்துறை சார்பில், 'டிரெக் தமிழ்நாடு' மலையேற்ற சுற்றுலா செயல்படுத்தப்படுகிறது. இதற்கு, 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்ய இயலும். எளிய, மிதமான, கடினமான என மூன்று வகைகளில் வழித்தடங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில், ஏழு வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பருவநிலையை கருத்தில் கொண்டு, வால்பாறை மானாம்பள்ளி மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. வெள்ளியங்கிரியில் பக்தர்கள் மலையேற்றத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், மலையேற்றத் திட்டம் செயல்பாட்டில் இல்லை. கட்டணமின்றி அனைவரும் செல்லலாம்.
இந்நிலையில், மானாம்பள்ளி மற்றும் மூன்று வழித்தடங்களை வனத்துறை அனுமதி அளித்துள்ளது. எளிய வழித்தடத்தில் பர்லியாறு, மிதமான வழித்தடத்தில் ஆழியாறு கான்டூர் கால்வாய் கரை, கடினமான பிரிவில், எட்டு கி.மீ., தூரம் கொண்ட டாப்ஸ்லிப்- பண்டாரவரை வழித்தடம் ஆகியவை மலையேற்ற விரும்பிகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதன்வாயிலாக, கோவை மாவட்டத்தில், தற்போது 4 வழித்தடங்களில் மலையேற்றம் மேற்கொள்ளலாம். https://trektamilnadu.com என்ற தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.