/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் புதிதாக இரு பாடப்பிரிவு துவக்க அனுமதி
/
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் புதிதாக இரு பாடப்பிரிவு துவக்க அனுமதி
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் புதிதாக இரு பாடப்பிரிவு துவக்க அனுமதி
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் புதிதாக இரு பாடப்பிரிவு துவக்க அனுமதி
ADDED : மே 24, 2025 05:49 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நடப்பாண்டு, புதிதாக இரண்டு புதிய பாடப்பிரிவுகள் துவங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.காம்.,(சிஏ), பி.காம்.,(பிஏ), பி.பி.ஏ., பி.எஸ்சி., (கணிதம்), பி.ஏ., (ஆங்கிலம்) ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.
இந்நிலையில், பி.சி.ஏ., பி.எஸ்சி., கணினி அறிவியல், பி.ஏ., பொருளாதாரம், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகள் துவங்கினால் அதிகளவு மாணவர்கள் பயன்பெற முடியும். பி.எஸ்சி., கணினி அறிவியல் தனியார் கல்லுாரியில் படிக்க அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.
அரசு கல்லுாரியில் குறைந்த கட்டணத்தில் படிக்கலாம். அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு, பெற்றோர், கல்வி ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நடப்பாண்டு, இரண்டு பாடப்பிரிவுகளை துவங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் சுமதி கூறுகையில், ''கல்லுாரி ஐந்து பாடப்பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது, பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., பாடப்பிரிவுகள் புதிதாக துவங்க அரசு அனுமதி அளித்துள்ளது. அரசாணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.
'ஆன்லைன்' விண்ணப்பம்
பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு 'ஆன்லைன்' வாயிலாக, வரும், 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மொத்தம், 50 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவுக்கு, இரண்டு ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஒரு விண்ணப்பத்தில் மாணவர்கள் பல கல்லுாரிகளுக்கும், பல பாடப்பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கலாம், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.