/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளையாட்டு ஆர்வமிருந்தால் அனுமதி; படிப்பில் பின்தங்கியோருக்கு பயிற்சி
/
விளையாட்டு ஆர்வமிருந்தால் அனுமதி; படிப்பில் பின்தங்கியோருக்கு பயிற்சி
விளையாட்டு ஆர்வமிருந்தால் அனுமதி; படிப்பில் பின்தங்கியோருக்கு பயிற்சி
விளையாட்டு ஆர்வமிருந்தால் அனுமதி; படிப்பில் பின்தங்கியோருக்கு பயிற்சி
ADDED : ஆக 20, 2025 09:18 PM
பொள்ளாச்சி; அரசு பள்ளிகளில், 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களில், விளையாட்டில் சிறந்து விளங்குவோர் மட்டுமே போட்டிக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளிக்கல்வி துறை வாயிலாக குடியரசு, பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. நாளை, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியும் துவங்க உள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு மாணவரும் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் இடைவிடாது பயிற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர். அதேநேரம், செப்., 14ம் தேதிக்குக்கு பின், காலாண்டு தேர்வும் நடத்தப்படவுள்ளது. அதனால், பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பை பொறுத்தமட்டில், விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களை மட்டுமே போட்டிக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
விளையாட்டில் ஆர்வமில்லாத மாணவர்களுக்கும், கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கும் பாடங்கள் குறித்து பயிற்சி அளிக்க தலைமை ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
அரசு பள்ளிகளில், 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 60 சதவீதத்துக்கும் குறைவாக மாணவர் தேர்ச்சி விகிதம் இருக்கும் பட்சத்தில், தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கோரப்படுகிறது. அதனால், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையில் பணிபுரிய வேண்டியுள்ளது.
அதன் காரணமாகவே, விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மட்டுமே போட்டிக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். விளையாட்டில் ஆர்வம் இல்லாத பிற மாணவர்களை அனுப்பினால், பொழுதுபோக்க நினைப்பர்.
இதனை தவிர்க்க, படிப்பில் பின்தங்கிய மற்றும் விளையாட்டில் ஆர்வமில்லாத மாணவர்களுக்கு, தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக மாணவர்கள் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முடியும்.
இவ்வாறு, கூறினர்.

