/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணினி உதவியாளரை நியமிக்க அனுமதி
/
கணினி உதவியாளரை நியமிக்க அனுமதி
ADDED : மே 14, 2025 11:47 PM
சூலுார்; ஊரக வளர்ச்சி துறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய பொறியியல் பிரிவுக்கு, கணினி உதவியாளரை அவுட் சோர்சிங் முறையில் நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் சங்கத்தினர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கமிஷனரிடம், ஒவ்வொரு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பொறியியல் பிரிவுக்கு, கணினி உதவியாளர் பணியிடத்தை தொகுப்பூதிய முறையில் நியமிக்க கோரிக்கை விடுத்து இருந்தது.
இதை பரிசீலித்த ஊரக வளர்ச்சி துறை கமிஷனர், மாவட்ட கலெக்டர்களுக்கு, அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஊராட்சி ஒன்றிய பொறியியல் பிரிவுக்கு, அவுட்சோர்சிங் முறையில் முற்றிலும் தற்காலிகமாக, கணினி உதவியாளரை நியமிக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ஊதியம் வழங்க வேண்டும். அவுட்சோர்சிங் நிறுவனத்தின் மூலம் கணினி உதவியாளரை தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும். கம்ப்யூட்டர் அப்பிளிக்கேஷன் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்த நபர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.