/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஞ்சலிங்கம் அருவிக்கு அனுமதி
/
பஞ்சலிங்கம் அருவிக்கு அனுமதி
ADDED : ஜன 15, 2026 06:55 AM
உடுமலை: திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து சீரானதால், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
உடுமலை திருமூர்த்திமலை பகுதியில், பெய்த கனமழை காரணமாக, மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு கருதி, பக்தர்கள், சுற்றுலா பயணியர் அருவிக்குச்செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மழை குறைந்து, அருவியில் நீர்வரத்து சீரானதால், பக்தர்கள், சுற்றுலா பயணியர் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால், நுாற்றுக்கணக்கான மக்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
அதே போல் மலையடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலிலும், ஏராளமான பக்தர்கள் மும்மூர்த்திகளை தரிசனம் செய்தனர்.

