/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாடகை நாச்சி அம்மன் கோவிலுக்கு செல்ல அனுமதி
/
தாடகை நாச்சி அம்மன் கோவிலுக்கு செல்ல அனுமதி
ADDED : டிச 12, 2024 05:42 AM
பொள்ளாச்சி; 'தாடகை நாச்சி அம்மன் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது,' என பொள்ளாச்சி வனச்சரகர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி வனச்சரகர் ஞானபாலமுருகன் கூறியதாவது:
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட அர்த்தநாரிபாளையம் சுற்றில் உள்ள தாடகை நாச்சியம்மன் கோவிலுக்கு கார்த்திகை தீப திருநாள் நாளை (13ம் தேதி) நடக்கிறது.
இதற்காக விண்ணப்பித்த, 200 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை, 7:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் சமர்பிக்கப்பட்ட பொதுமக்களிடம், வன உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நெகிழி பொருட்கள், கவர்கள் போன்றவற்றை கொண்டு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு, அவர் கூறினார்.

