தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'மாற்றுத்திறனாளிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும்'

'மாற்றுத்திறனாளிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும்'

'மாற்றுத்திறனாளிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும்'


ADDED : அக் 21, 2024 11:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2024 11:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ''மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்,'' என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஸ்வநாதன் பேசினார்.

மாற்றுத்திறனாளி கலைஞர்களின், 12 புகைப்படங்கள் இடம்பெற்ற 2025ம் ஆண்டுக்கான, 'நான் சிறப்பு மிக்கவன்' என்ற காலண்டர் வெளியீட்டு விழா, சுவர்கா அறக்கட்டளை சார்பில், கோவை ரெசிடென்சி ஓட்டலில் நடந்தது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஸ்வநாதன், காலண்டரை வெளியிட்டார்.

அப்போது அவர்பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டத்தில், பல்வேறு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்களை போல, மாற்றுத்திறனாளிகளுக்கு சமமான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட் பல்வேறு தீர்ப்புகளை அளித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், 97 சதவீதம் மார்க் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர், நீட் தேர்வு எழுதினார்.

நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான உடற்தகுதி, 45 சதவீதத்திற்கு குறைவாக இருந்ததால், அவருக்கு மருத்துவ கல்வி படிப்புக்குஇடம் கிடைக்கவில்லை. இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்தி, அவரது திறமை மற்றும் மார்க் அடிப்படையில், மருத்துவ படிப்புக்கு அட்மிஷன் கொடுக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிக்கான உடற்தகுதி சதவீதத்தை கணக்கில் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. தற்போது அந்த மாணவர், லாகூர்மருத்துவ கல்லுாரியில் படிக்கிறார். மாற்றுத்திறனாளிகளின்திறமைக்கு ஏற்ப, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உரிய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு, நீதிபதி விஸ்வ நாதன் பேசினார்.

சுவர்கா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுவர்ணலதா, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் மற்றும்பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us