sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அதிர்ச்சியில் உறைந்த பெருமாள் பக்தர்கள்!

/

அதிர்ச்சியில் உறைந்த பெருமாள் பக்தர்கள்!

அதிர்ச்சியில் உறைந்த பெருமாள் பக்தர்கள்!

அதிர்ச்சியில் உறைந்த பெருமாள் பக்தர்கள்!

2


ADDED : செப் 23, 2024 12:14 AM

Google News

ADDED : செப் 23, 2024 12:14 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் தயாரிக்கும் நெய்யில், மாமிச கொழுப்பு கலந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல், கோவை பெருமாள் பக்தர்கள் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் செய்தவரை வெங்கடாசலபதி தக்க நேரத்தில் தண்டிப்பார் என கொந்தளிக்கின்றனர்.

'மிகப்பெரிய குற்றம்'


திருப்பதி லட்டு, மாமிச கொழுப்பு கலந்த நெய்யால் தயாராகிறது என, பரவலாக வரும் செய்திகளை, நம்பவே முடியவில்லை. ரொம்ப 'ஷாக்கிங்' ஆக உள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இந்த கலப்படம் நடந்திருக்குமாயின், மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்த குற்றத்தில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும், தண்டனைக்குரியவர்தான். அவர்களுக்கு நீதிமன்றம், சரியான தண்டனையை அளிக்க வேண்டும்.

- கோபால் மேட்டுப்பாளையம்

''கடும் நடவடிக்கை தேவை'


உலகப்புகழ் பெற்ற திருப்பதி எழுமலையான் கோவிலில், பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாமிச கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தியதாக எழுந்த புகார், கடும் அதிர்ச்சி தருகிறது. தெய்வத்திற்கு பிரசாதம் தயாரிக்க அனுப்பப்படும் நெய் என தெரிந்தும், இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அரசு, தற்போதைய அரசு என, மாறி மாறி குற்றஞ்சாட்டுவதை தவிர்த்து விட்டு, சம்மந்தப்பட்டவர்கள் மீது, ஆந்திர அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரகுபதி சிங்காநல்லுார்

'புலால் மறுத்தல் தர்மம்'


புலால் மறுத்தல் என்பது சனாதன தர்மம். பகவானுக்கு தயாரிக்கப்படும் லட்டுக்கான நெய்யில், மாமிசக்கொழுப்பு கலந்திருக்கிறது என்றால், பெருமாளையே அசுத்தப்படுத்தியதாக அர்த்தம். அந்த அசுத்தம் வெளியே வருவதற்காக, பெருமாளே வீரு கொண்டு எழுவார். அப்போது தவறை செய்தவருக்கும், கடும் தண்டனையை கொடுப்பார். இதை அனைவருக்கும் தெரியும்படியே செய்வார் பெருமாள்.

- திருமலை வீரகேரளம்.

'புகழை மங்கச்செய்யும் முயற்சி'


திருப்பதி ஏழுமலையான் கோவிலில், லட்டு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை டெண்டர் எடுப்பதற்கு முன்பே, அந்நிறுவனத்தின் விபரங்கள் கேட்டறியப்படும். அதன் பின், அதன் சாம்பிள்கள் வாங்கி, முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் பின்பே அவர்களுக்கு சப்ளை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும். அப்படி இருக்கும் போது, எப்படி நெய்யில் மாமிசக்கொழுப்பு கலந்திருக்கும்? இது திருப்பதி கோவிலின் புகழை, மங்கச்செய்வதற்கான முயற்சியாகும். இந்த உலகம் இருக்கும் வரை, திருப்பதி பெருமாளின் புகழ் நிலைக்கும்; அவர் புகழ் எப்போதும் மங்காது.

- பெரியநம்பி சலிவன்வீதி

'லட்டில் விளையாடாதீர்'


ஆந்திர மாநிலத்தில் உச்சத்தில் இருக்கும், இரு தலைவர்களும் பெருமாள் பிரசாதமான லட்டை கையில் எடுத்து விளையாடுவது தவறு. யார் ஆட்சியில் இருந்தாலும், தெய்வ விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆந்திர மாநிலத்தில் முன்பு இருந்த ஆட்சியாளர்கள், தெய்வ விஷயத்தை கையிலெடுத்து, அரசியல் செய்தார்கள். கடைசியில் காணாமல் போனார்கள். பக்தர்களுக்கு வழங்கும் பிரசாதம் தரமானதாகவும், தெய்வத்தன்மையோடும் இருக்க வேண்டும். அதற்கான முயற்சியில் ஆட்சியாளர்கள் இறங்க வேண்டும்.

- கோகுல் இடையர் வீதி

'தண்டனை கிடைக்கும்'


108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று திருமலை திருப்பதி. அங்கு இறைவனுக்கு நிவேதனம் செய்வதற்கும், பக்தர்களுக்கு வழங்கவும் தயாரிக்கப்படும் லட்டு உள்ளிட்ட அனைத்து பிரசாதங்களும், மிகவும் ஆச்சார அனுஷ்டானங்களோடு, சுத்தமாகவும், தரமாகவும் தயாரிக்கப்படும். அந்த நெய்யில் மாமிச கொழுப்பு கலந்திருப்பதாக சொல்லப்படுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், திருப்பதி வெங்கடேச பெருமாள். தவறு செய்தவர்களுக்கு சரியான தண்டனையை வழங்குவார். அதில் எந்த சந்தேகமுமில்லை.

- அப்பன்னாசாரி பெரியகடைவீதி






      Dinamalar
      Follow us