/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குடமுழுக்கில் தமிழில் வழிபாடு நடத்த அனுமதிக்கணும் பேரூர் ஆதினம் வலியுறுத்தல்
/
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குடமுழுக்கில் தமிழில் வழிபாடு நடத்த அனுமதிக்கணும் பேரூர் ஆதினம் வலியுறுத்தல்
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குடமுழுக்கில் தமிழில் வழிபாடு நடத்த அனுமதிக்கணும் பேரூர் ஆதினம் வலியுறுத்தல்
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குடமுழுக்கில் தமிழில் வழிபாடு நடத்த அனுமதிக்கணும் பேரூர் ஆதினம் வலியுறுத்தல்
ADDED : பிப் 04, 2025 07:46 AM
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், வடமொழிக்கு நிகராக, தமிழில் குடமுழுக்கு சடங்குகள் நடத்த வேண்டும் என, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் வலியுறுத்தியுள்ளார்.
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குடமுழுக்கு வரும், 10ம் தேதி நடக்கிறது. உலகத்தமிழ் காப்பு கூட்டு இயக்கம், தெய்வத்தமிழ் வழிபாட்டாளர்கள் கூட்டமைப்பு போன்ற இயக்கங்கள் இணைந்து, கோவில் குடமுழுக்கு, தமிழில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி, கடந்த, 1ம் தேதி கோவில் வளாகத்தின் முன் சாகும்வரை, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த பேரூர் தாசில்தார் ரமேஷ், இது குறித்து, 3ம் தேதி அறநிலையத்துறை இணை கமிஷனர் தலைமையில் கூட்டம் நடத்தி, தீர்வு காணப்படும் என உறுதி அளித்தபின், அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், நேற்று தமிழ் அமைப்பினர், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதனைத்தொடர்ந்து, பேரூர் திருமடத்தில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் தலைமையில், தமிழ் அமைப்புகளின் கூட்டம், நேற்று மாலை நடந்தது.
அதன்பின், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் நிருபர்களிடம் கூறுகையில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நீண்ட நெடிய வரலாற்று சிறப்பு உடையது. தொடக்க காலத்தில், எல்லோரும் அதில் எவ்வித ஏற்றத்தாழ்வு இல்லாமல் வழிபாடு செய்தனர்.
பட்டிமுனி, கோமுனி, காலவன், காமதேனு ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். 1953ம் ஆண்டு முதல் தமிழில் அர்ச்சனை நடந்தது. அதனைத்தொடர்ந்து, 1954ம் ஆண்டு முதல் பேரூர் ஆதினம், சிரவை ஆதினம் உள்ளிட்ட ஆதினங்கள், தமிழ் வழிபாட்டாளர்கள் மூலம் பல்வேறு கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
நீதிமன்றமும், வடமொழிக்கு நிகராக, தமிழ் மொழியில் வழிபாடு நடத்த வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குடமுழுக்கு யாகசாலையில், 60 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 30 குண்டங்கள் தமிழ் வழிபாட்டுக்கு ஒதுக்க வேண்டும்,'' என்றார்.

