/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேற்று முதல் 10ம் தேதி வரை பேரூர் பட்டீஸ்வரர் சிறப்பு முத்திரை
/
நேற்று முதல் 10ம் தேதி வரை பேரூர் பட்டீஸ்வரர் சிறப்பு முத்திரை
நேற்று முதல் 10ம் தேதி வரை பேரூர் பட்டீஸ்வரர் சிறப்பு முத்திரை
நேற்று முதல் 10ம் தேதி வரை பேரூர் பட்டீஸ்வரர் சிறப்பு முத்திரை
ADDED : பிப் 02, 2025 01:19 AM
கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முதல் வரும் 10ம் தேதி வரை, பேரூர் துணை தபால் நிலையத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதங்களில், பேரூர் பட்டீஸ்வரர் உருவம் பொறித்த, சிறப்பு முத்திரை வைக்கப்பட்டுள்ளது.
இந்திய தபால் துறை சார்பில், வரலாற்று புகழ்பெற்ற தலங்களுக்கு தபால் தலைகள், சிறப்பு முத்திரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சிறப்பு முத்திரைகள், சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள தபால் நிலையங்களில் இருந்து அனுப்பப்படும். இவை, கடிதங்களில் சீல்' ஆக வைக்கப்படுவது வழக்கம்.
நாடு முழுவதும், 30க்கும் மேற்பட்ட சிறப்பு முத்திரைகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கோவையில், பேரூர் பட்டீஸ்வரர் உருவம் பொறித்த முத்திரை பயன்படுத்தப்படுகிறது.
பேரூர் துணை தபால் நிலையத்துக்கு ஒரு நாளுக்கு, 500 முதல் ஆயிரம் வரை கடிதங்கள் வரும் நிலையில், வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு இணங்க, இந்த முத்திரை வைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 10ம் தேதி நடக்கும் நிலையில், நேற்று முதல் அன்றைய தினம் வரை, பேரூர் துணை தபால் நிலையத்துக்கு வரும் அனைத்து கடிதங்களிலும், இந்த சிறப்பு முத்திரை பதிக்கப்பட்டு, அனுப்பப்படுகிறது.