/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளர்ப்பு பூனையால் விபரீதம்; பாம்பு கடித்து பெண் பலி
/
வளர்ப்பு பூனையால் விபரீதம்; பாம்பு கடித்து பெண் பலி
வளர்ப்பு பூனையால் விபரீதம்; பாம்பு கடித்து பெண் பலி
வளர்ப்பு பூனையால் விபரீதம்; பாம்பு கடித்து பெண் பலி
ADDED : செப் 21, 2024 05:51 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, வளர்ப்பு பூனை வீட்டினுள் கவ்வி வந்த கட்டுவிரியன் பாம்பு கடித்ததில், பெண் இறந்தார்.
பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நேருநகரை சேர்ந்த ரவி என்பவரது மனைவி சாந்தி, 58. இவர்களது மகன் சந்தோஷ். இவர்கள், வீட்டில் பூனை வளர்க்கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், அந்த பூனை வீட்டு வளாகத்தில் ஊர்ந்து சென்ற கட்டுவிரியன் பாம்பு, வீட்டினுள் கவ்வி சென்றுள்ளது. வீட்டினுள் படுக்கை அறைக்கு பாம்பை கொண்டு சென்று, கடித்து குதறியுள்ளது.
அதன்பின், பூனை வெளியே சென்ற நிலையில், வீட்டினுள் துாங்கிக்கொண்டிருந்த சாந்தியை பாம்பு கடித்தது. பாம்பை கண்டு சாந்தி அலறியடித்து சப்தம் எழுப்பியதும்,மகன் சந்தோஷ் அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சாந்தி இறந்தார்.
இது குறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பூனை கடித்ததில் காயமடைந்திருந்த பாம்பும் இறந்தது. இச்சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.