/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு மனு
/
நகராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு மனு
நகராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு மனு
நகராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு மனு
ADDED : மே 09, 2025 06:50 AM
வால்பாறை; வால்பாறை நகராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி, 12 கவுன்சிலர்கள் கமிஷனிரிடம் மனு கொடுத்தனர்.
வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தலைவர், துணைத்தலைவர் உட்பட 19 பேர் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். அ.தி.மு.க., வி.சி., கட்சியை சேர்ந்த தலா ஒரு கவுன்சிலர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே மன்றக்கூட்டத்தில், தீர்மான நகல் தாமதமாக வழங்குவதாக கூறியும், வரவு, செலவு கணக்குகள் மன்ற கூட்டத்தில் முறையாக சமர்ப்பிக்கவில்லை எனக்கூறியும் கவுன்சிலர்களுக்கும், தலைவருக்கும் இடையே மோதல் நிலவுகிறது. கவுன்சிலர்களின் எதிர்ப்பால் இரண்டு முறை மன்றக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வால்பாறை நகராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள் உட்பட, 12 கவுன்சிலர்கள் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட படகு இல்லம், தற்போது கொண்டு வந்தது போல் கணக்கு காட்டி அதற்கான தொகையை எடுக்கப்பட்டதில் ஊழல் நடந்துள்ளது. ஒப்பந்தாரர்களிடம் கமிஷன் பெறுவதுடன், தலைவர் வார்டில் மட்டும் வளர்ச்சிப்பணி நடக்கிறது.
பிற வார்டுகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதில்லை. நகராட்சி நிர்வாகத்தில் அவரது கணவர் தலையீடு அதிகமாக உள்ளது. எனவே நகராட்சி கூட்டத்தை கூட்டி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.