/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிப்பிட கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு ;மாற்று நடவடிக்கை கோரி மனு
/
கழிப்பிட கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு ;மாற்று நடவடிக்கை கோரி மனு
கழிப்பிட கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு ;மாற்று நடவடிக்கை கோரி மனு
கழிப்பிட கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு ;மாற்று நடவடிக்கை கோரி மனு
ADDED : ஜன 29, 2024 11:30 PM
பொள்ளாச்சி;'ஆனைமலை சார் - பதிவாளர் அலுவலக கழிப்பிட கழிவுநீர் வெளியேறுவதை தடுத்து, சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்,' என, சப் - கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப்- கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமை வகித்தார்.
பி.ஏ.பி., ஆழியாறு திட்டக்குழு உறுப்பினர் விக்ரம் முத்துரத்தின சபரி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆனைமலை சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு, பத்திரப்பதிவுக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். இதன் அருகே ஆனைமலை போலீஸ் ஸ்டேஷன், பத்திர எழுத்தர்கள், உணவு விடுதிகள், கடைகள் உள்ளன.
பத்திர பதிவுக்காக வரும் மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இங்கு, தினமும், 100 பத்திரங்கள் பதியப்படுகின்றன.
மக்கள் காத்திருக்கும் நேரங்களில், இயற்கை உபாதை கழிக்க, சார் - பதிவாளர் அலுவலகத்தில் ஒரே ஒரு கழிப்பிடம் மட்டுமே உள்ளன. அக்கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக அலுவலகம் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கலக்கிறது.
தேங்கி நிற்கும் கழிவுநீரால், பொது சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இது குறித்து ஆய்வு செய்து உரிய மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி குழாய்
மூலனுார் ஊராட்சி மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
மூலனுார் ஊராட்சியில் கடந்த, 2023 - 24ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் மயானத்துக்கு தெருவிளக்கு வசதி, தண்ணீர் வசதி ஏற்படுத்துதல் பணி, 5.60 லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்கிறது.
அதில், ஊராட்சி பொது பயன்பாட்டுக்கு என, இரண்டு இஞ்ச் பைப் லைன் செல்கிறது. இந்த பைப் லைன் குழியில், போர்வெல் முதல் மயானம் வரை தனிநபர் எவ்வித அனுமதியின்றி, அத்துமீறியும், 4 இஞ்ச் பைப் பதிந்து கொண்டு செல்கிறார். அனுமதியற்ற பைப் லைனை அகற்ற வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டது.