தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஸ்டாலின் ஸ்டிக்கர் அகற்ற மனு

 ஸ்டாலின் ஸ்டிக்கர் அகற்ற மனு

 ஸ்டாலின் ஸ்டிக்கர் அகற்ற மனு


ADDED : மார் 27, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 08:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: 'கூடலுார் கிராமப்புறங்கள் மற்றும் டான்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளில், தேர்தல் விதிமுறைகளை மீறி ஒட்டப்பட்ட முதல்வரின் ஸ்டிக்கர்களை அகற்ற வேண்டும்,' என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

கூடலுார் தொகுதியில் பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இருந்த முதல்வர் படங்களை தேர்தல் அதிகாரிகள் அகற்றினர். அதே போன்று, வீட்டு கதவுகளில் முதல்வர் படத்துடன் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர் அகற்ற அரசியல் கட்சிகள் வலியுறுத்தினர்.

'அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அகற்றவில்லை. இதனால், 'முதல்வர் ஸ்டிக்கர் அகற்றப்படவில்லை' என, அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று ஆர்.டி.ஓ. குணசேகரிடம் மனு அளித்தனர்.

'கிராமங்கள் மற்றும் டான்டீ தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புகளில், விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் ஸ்டிக்கர்களை உடனே அகற்ற வேண்டும்' என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us