/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சின்னியம்பாளையத்தில் 'யு டேர்ன்' அகற்ற மனு
/
சின்னியம்பாளையத்தில் 'யு டேர்ன்' அகற்ற மனு
ADDED : ஆக 10, 2025 02:33 AM
சூலூர் : சின்னியம்பாளையத்தில் உள்ள 'யு டேர்னை' அகற்ற, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை - அவிநாசி ரோட்டில், இரு இடங்களில் 'யு டேர்ன்' உள்ளது. இதனால், வாகன நெரிசலும், மக்கள் ரோட்டை கடக்க முடியாமலும் தினமும் திணறி வருகின்றனர்.
யு டேர்னை அகற்ற வேண்டும்; மீண்டும் சிக்னல் முறையை அமல்படுத்த வேண்டும், என, நுகர்வோர் உரிமை சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
சின்னியம்பாளையம் செக்போஸ்ட் அருகில் சிக்னல் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. அதை நிறுத்தி விட்டு, இரு இடங்களில் 'யு டேர்ன்' முறை அமல்படுத்தப்பட்டது. அன்று முதல், வாகன நெரிசல் அதிகரித்தது. பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் ரோட்டை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இருகூர் பிரிவில் இருக்கும் யு டேர்னால் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகளும் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போலீசாரும் ஆய்வு செய்துள்ளனர். சிக்னல் முறையே வேண்டும் என, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் நலன் கருதி யு டேர்னை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

