/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்களை மாற்றியமைக்க மனு
/
போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்களை மாற்றியமைக்க மனு
போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்களை மாற்றியமைக்க மனு
போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்களை மாற்றியமைக்க மனு
ADDED : ஏப் 06, 2025 09:59 PM

--- நிருபர் குழு -
பொள்ளாச்சி மின்சார வாரிய அலுவலகத்தில், மின்நுகர்வோர் குறைதீர் முகாம் நடந்தது.அதில், போடிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜா மனு கொடுத்தார். மனுவில், கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி அருகே, போடிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மின்சாரம் போதுமான வினியோகம் இல்லை. குறைந்த மின் அழுத்தமாக உள்ளதால், மின்சாரம் அடிக்கடி தடைபடுகிறது. எனவே, ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், போடிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை இடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழக மின் வாரியம் சார்பில், மின் நுகர்வோர் குறை தீர்க்கும் சிறப்பு முகாம், கோட்ட அளவில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், உடுமலை கோட்ட அளவில், மின் நுகர்வோர் குறை தீர்க்கும் சிறப்பு முகாம், உடுமலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கீதா, செயற்பொறியாளர் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
முகாமில், மின் நுகர்வோர் பில்லிங் தொடர்பான புகார்கள், மின் மீட்டர் சம்மந்தமான புகார்கள், குறைந்த மின் அழுத்த பிரச்னைகள், பழுதடைந்த மின் கம்பம் மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, நுாற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு, உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

