/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க மனு
/
முன்னாள் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க மனு
ADDED : செப் 29, 2025 10:37 PM

பொள்ளாச்சி:
தமிழக காங். கட்சி தலைவர் குறித்து தரக்குறைவாக பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கோவை தெற்கு மாவட்ட காங். கட்சியினர், பொள்ளாச்சி ஏ.எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கோவை தெற்கு மாவட்ட காங். கட்சி தலைவர் சக்திவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொள்ளாச்சி ஏ.எஸ்.பி. சிருஷ்டி சிங்கிடம் புகார் மனு கொடுத்தனர்.
மனுவில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி, ஊட்டியில் பேசிய போது, தமிழக காங். கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து அவதுாறாகவும், தரக்குறைவாகவும் பேசியுள்ளார். இது சட்ட ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பிரசார சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.