/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமானப் பொருள் விலையை கட்டுப்படுத்த கலெக்டரிடம் மனு
/
கட்டுமானப் பொருள் விலையை கட்டுப்படுத்த கலெக்டரிடம் மனு
கட்டுமானப் பொருள் விலையை கட்டுப்படுத்த கலெக்டரிடம் மனு
கட்டுமானப் பொருள் விலையை கட்டுப்படுத்த கலெக்டரிடம் மனு
ADDED : பிப் 13, 2024 12:20 AM

கோவை;பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, கோவை மையத் தலைவர் கணேஷ்குமார், முன்னாள் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் ஜோசப் ஆகியோர் கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்து கட்டுமானப் பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தினர்.
சங்கத்தலைவர் கணேஷ் குமார் கூறுகையில், ''எம் சாண்டு, பி சாண்டு மற்றும் ஜல்லி விலை, 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு, கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள் மீது, கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரெடிமேட் கான்கிரீட் மற்றும் பிளை ஏஷ் செங்கற்கள் விலையும் உயர்ந்துள்ளது. இதை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். தவறினால் கட்டுமானப்பணிகள் முடங்கும்,'' என்றார்.
பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, கோவை மைய முன்னாள் தலைவர் விஸ்வநாதன் கூறுகையில், ''விலை ஏற்றத்தால், கட்டுமானத் துறையிலுள்ள பலருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுமான நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளன. கட்டுமானத் தொழிலாளர்கள் பலர், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதிய திட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதால், இத்துறையில் மந்தநிலை ஏற்படும். கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்,'' என்றார்.