/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதார் சேவை மையத்தை திறக்க கலெக்டருக்கு மனு
/
ஆதார் சேவை மையத்தை திறக்க கலெக்டருக்கு மனு
ADDED : ஏப் 08, 2025 10:15 PM
வால்பாறை, ; வால்பாறையில், பூட்டி கிடக்கும் ஆதார் சேவை மையம் திறக்க வேண்டுமென, மாவட்ட கலெக்டருக்கு மா.கம்யூ., கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
வால்பாறை தாலுகா மா.கம்யூ., கட்சியின் செயலாளர் பரமசிவம், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறை தாலுகா அலுவலகத்தில் செயல்படும் ஆதார் சேவை மையம், கடந்த சில நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால், புதியதாக ஆதார் எடுக்கவும், பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை செய்ய முடியாமல், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் தவிக்கின்றனர்.
குறைவான சம்பளத்தில் எஸ்டேட் பகுதியில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களும், நாள் தோறும் பூட்டி கிடக்கும் ஆதார் சேவை மையத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மக்களின் நலன் கருதி உடனடியாக ஆதார் சேவை மையத்தை திறந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.