/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2சி பஸ்சை மீண்டும் இயக்க கலெக்டரிடம் மனு
/
2சி பஸ்சை மீண்டும் இயக்க கலெக்டரிடம் மனு
ADDED : ஆக 25, 2025 09:49 PM

கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.
n 'பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையை அடைத்து சாலையோரம் பெட்டிக்கடைகள் வைக்கக் கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து அடையாள அட்டை வைத்திருக்கும் வியாபாரிகள் மட்டுமே சாலையோரம் கடை நடத்த அனுமதிக்க வேண்டும். மற்ற ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்' என, சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
n நாம் தமிழர் கட்சி சார்பில் கொடுத்த மனுவில், 'கோவையில் 9 அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல் வருகிறது. இந்நடவடிக்கை தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதாக உள்ளது. மூடப்பட்ட அனைத்து பள்ளிகளையும் திறக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.
n விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடுத்த மனுவில், 'தொண்டாமுத்துாரில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச பட்டா கேட்டு 1,131 மனுக்கள் கொடுக்கப்பட்டன. இதுவரை அதன் மீது நடவடிக்கை இல்லை. விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.
n மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கொடுத்த மனுவில், 'செல்வபுரம், பேரூர் வழியாக பச்சாபாளையம் ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி வரை 2சி என்ற வழித்தட எண் கொண்ட அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் கொரோனா காலக்கட்டத்தின்போது நிறுத்தப்பட்டது. அந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.