/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைதீர் முகாமில் தொடரும் மனு போர்; தீர்வு கிடைக்காததால் மக்கள் அதிருப்தி
/
குறைதீர் முகாமில் தொடரும் மனு போர்; தீர்வு கிடைக்காததால் மக்கள் அதிருப்தி
குறைதீர் முகாமில் தொடரும் மனு போர்; தீர்வு கிடைக்காததால் மக்கள் அதிருப்தி
குறைதீர் முகாமில் தொடரும் மனு போர்; தீர்வு கிடைக்காததால் மக்கள் அதிருப்தி
ADDED : நவ 21, 2024 11:22 PM
கோவை ; கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடக்கிறது. ஒவ்வொரு கூட்டத்திலும், 175 முதல் 250 புகார் மனுக்கள் வருகிறது அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் பரிந்துரைக்கிறார்.
அந்த மனு மீது, 15 முதல் 30 நாட்களில் தீர்வு காண வலியுறுத்தியும் எந்த தீர்வும் கிடைக்காததால் மீண்டும் மக்கள் மனுக்களை சமர்பிக்கின்றனர். அதனால் மனு கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
வி.ஏ.ஓ.,க்கள், ஆர்.ஐ.க்கள், தாசில்தார்கள், பி.டி.ஓ.,க்கள், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள், மின் வாரியத்தினர், உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் உள்ளிட்ட துறையினர் தீர்வு காணப்படாததால் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் குவிகிறது.
அந்த மனுக்கள் கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பரிந்துரையில் மீண்டும் அதே துறை அதிகாரிகளுக்கு சென்ற போதும் தீர்வு கிடைப்பதில்லை. அதனால் மனு கொடுத்தவர்கள் தொடர்ந்து மனுக்களை கொடுத்து வருகின்றனர்.
2024 ஜன.,முதல் கடந்த வாரம் வரை வந்த மனுக்களில், 2,098 புகார் மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை, 15 நாட்களில் 1,797 புகார் மனுக்களும், 30 நாள் வரை 46 மனுக்களும், 3 மாதம் வரை, 338 மனுக்களும், 6 மாதம் வரை 56 மனுக்களும், அதற்கும் மேல் 2 மனுக்களும் நிலுவையில் உள்ளது.
இரண்டாயிரத்தை தாண்டிய மனு எண்ணிக்கையை குறைக்க வேண்டும். மனு மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மற்றும் விசாரணை அறிக்கையை தயார் செய்து அந்தந்த மனு மீது பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டும் இதுவரை பதிவு செய்யவில்லை.
மக்கள் குறைதீர்ப்புக்கூட்டத்துக்கு மின்வாரியம் சார்பில் பொறுப்பான அதிகாரிகளை நியமிக்க வலியுறுத்தியும் இது வரை உதவிபொறியாளர் அல்லது அதற்கு கீழ் அந்தஸ்திலுள்ள அதிகாரிகளையே நியமிக்கின்றனர். அந்த அதிகாரிக்கு மாவட்டம் முழுக்க உள்ள பிரச்னை குறித்து தெரிவதில்லை அதனால் பெரும்பாலான மனுக்கள் நிலுவைக்கு போகிறது.
முதல்வன் திட்டத்தில் 1,51,389 புகார் மனு பெறப்பட்டு, அதில் 16,256 புகார் மனுவிற்கு தீர்வு காணப்பட்டது. 19,831 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனை என்ற பெயரில் நிலுவையில் உள்ளது. இதனால், மனுதாரர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இது குறித்து சமூகபாதுகாப்புதிட்ட துணை கலெக்டர் சுரேஷ் கூறுகையில், ''முதல்வரின் முகவரித்துறையின் மேற்கு மண்டல கண்காணிப்பு அலுவலர் கார்த்திகேயன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
விரைவில் மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வலியுறுத்தினார்,'' என்றார்.