/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பார்மசி கல்லூரிகள் விளையாட்டு போட்டி; கே.எம்.சி.எச்., அணி ஒட்டுமொத்த சாம்பியன்

ADDED : ஜூலை 25, 2025 09:06 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யுனைடெட் கல்வி நிறுவன வளாகத்தில் நடந்த பார்மசி கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டிகளில், கே.எம்.சி.எச்., அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் யுனைடெட் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள, யுனைடெட் பார்மசி கல்லூரியில் நான்காம் ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.
இதில், முதலிடத்தை கன்னியாகுமரி இம்மானுவேல் அரசர் கல்லூரி அணியும், இரண்டாம் இடத்தை கோவை சேரன் பார்மசி கல்லூரி அணியும், மூன்றாம் இடத்தை நாமக்கல் பி.ஜி.பி., மருந்தாக்கியர் கல்லூரியும், நான்காம் இடத்தை டி.என். பாளையம் ஜே.கே.கே., முனி ராஜா கல்லூரி அணியும் பெற்றன.
நான்கு நாட்கள் நடந்த மொத்த விளையாட்டு போட்டிகளில், நான்காவது முறையாக தொடர்ந்து ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை, கோவை மாவட்ட கே.எம்.சி.எச்., பார்மசி கல்லூரி அணி பெற்றது.
இரண்டாம் இடத்தை ராமகிருஷ்ணா பார்மசி கல்லூரி அணி பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், யுனைடெட் கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம் தலைமையில் செய்யப்பட்டு இருந்தன.