/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.2 லட்சம் மதிப்புள்ள போன் டவர் உதிரிபாகங்கள் திருட்டு
/
ரூ.2 லட்சம் மதிப்புள்ள போன் டவர் உதிரிபாகங்கள் திருட்டு
ரூ.2 லட்சம் மதிப்புள்ள போன் டவர் உதிரிபாகங்கள் திருட்டு
ரூ.2 லட்சம் மதிப்புள்ள போன் டவர் உதிரிபாகங்கள் திருட்டு
ADDED : டிச 24, 2024 07:18 AM
கோவை; ரூ.2 லட்சம் மதிப்பிலான மொபைல்போன் டவர் உதிரி பாகங்களை திருடிய நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையில் விவசாய நிலங்கள், தனியார் கட்டடங்களில் மொபைல்போன் டவர்கள் வாடகை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. சுக்கிரவார் பேட்டையில் உள்ள ஒரு கட்டடத்தில், தனியார் நிறுவன மொபைல்போன் டவர் உள்ளது.
இந்த நிறுவனம் தனது சேவையை நிறுத்தி விட்டதால், டவர் பயன்பாடின்றி இருந்தது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான மொபைல்போன் டவரில் இருந்து, உதிரிபாகங்கள் திருடு போவதாக நிறுவன அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. நிறுவன அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
சுக்கிரவார்பேட்டையில் உள்ள கட்டடத்தில், பொருத்தப்பட்டிருந்த மொபைல்போன் டவரை சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள், ஆய்வு செய்தனர். அப்போது ரூ.2 லட்சம் மதிப்பிலான உதிரிபாகங்கள் திருடப்பட்டிருப்பது தெரிந்தது.
இதுகுறித்து, அந்த நிறுவன அதிகாரி அர்ஜூனன், 49 ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.