ADDED : அக் 26, 2024 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை ஆர்.எஸ்.புரத் திலுள்ள மாநில வன உயர் பயிற்சியம் டி.என்.எப்.ஏ., கஜேந்திரா மண்டபத்தில், வனவிலங்கு புகைப்படக் கண்காட்சி துவங்கியது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு வன அகாடமியின் இயக்குனர் சேவா சிங் ஆகியோர், கண்காட்சியை துவங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், ஆனைமலை புலிகள் காப்பகம் வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் ராமசுப்பிரமணியன், துணை இயக்குனர் (ஜி.எஸ்.டி.,) பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் இடம்பெற்ற புகைப்படங்கள் அனைத்தும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்கின்றன.
நாளை வரை நடைபெறும் இந்த கண்காட்சியை, பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.