/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அழகுக் கலை சார்ந்த சிகிச்சைக்கு 'பிக்கோசெகண்ட் லேசர் டெக்னாலஜி'
/
அழகுக் கலை சார்ந்த சிகிச்சைக்கு 'பிக்கோசெகண்ட் லேசர் டெக்னாலஜி'
அழகுக் கலை சார்ந்த சிகிச்சைக்கு 'பிக்கோசெகண்ட் லேசர் டெக்னாலஜி'
அழகுக் கலை சார்ந்த சிகிச்சைக்கு 'பிக்கோசெகண்ட் லேசர் டெக்னாலஜி'
ADDED : ஏப் 24, 2025 11:19 PM

''சரும பராமரிப்பு மற்றும் அழகுக் கலை சார்ந்த சிகிச்சை முறைகளில், நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. இவற்றில் பிக்கோசெகண்ட் லேசர் டெக்னாலஜி, மிகவும் புதுமையான அறிமுகமாகும்,'' என, கோயம்புத்துார் மெடிக்கல் சென்டர் மருத்துவமனை தோல் மற்றும் அழகு கலை நிபுணர் டாக்டர் பவித்ரா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
சருமத்தை மாசற்ற முறையில் பராமரிக்கவும், புனரமைக்கவும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில், பிக்கோசெகண்ட் லேசர் டெக்னாலஜி, மிகவும் புதுமையானது; நவீனமயமானது.
இது முக அழகுக்கு மட்டுமின்றி, உடல் முழுவதும் பயன்படுத்த ஏற்றது. முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகள், மங்கு, கரும்புள்ளிகள், சருமத்தில் ஏற்படும் நிறமாற்றங்கள், முகத்தில் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகள், தோல் சுருக்கம் மற்றும் வயது காரணமாக தோலில் ஏற்படும் மாற்றங்களை, இந்த பிக்கோ லேசர் தொழில்நுட்பத்தால், சரி செய்யலாம்; டாட்டூ எனப்படும் பச்சை குத்திய அடையாளங்களையும் அழிக்கலாம்.
இது, விரைவான மற்றும் பாதுகாப்பான சிகிச்சை முறையாகும். அறுவை சிகிச்சை செயல்முறைகளோ, சருமத்தை துளையிட்டோ மேற்கொள்ளப்படுவதில்லை. உடலுக்குள் ஊடுருவாமல் வெளியில் இருந்து மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறை.
சிகிச்சைக்குப்பின், சருமத்தில் கொலாஜன்கள் உற்பத்தியாவது இயல்பாக துாண்டப்படுவதால், சருமம் இளமை தோற்றத்துடன், மென்மையாக காணப்படும்; சுருக்கங்களும் இருக்காது.
இத்தொழில்நுட்பத்தில், குறிப்பிட்ட தோல் பகுதிகளில், துல்லியமாக லேசர் கதிர்கள் செலுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படும். தோலின் பிற பகுதிகளில் பாதிப்பு ஏற்படாது.
சுமார் ஒரு மணி நேரத்தில், சிகிச்சை முடிந்து விடும். மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. கே.எம்.சி.எச்.,ல் இதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன.
முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 0422 - 432 3104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

