/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் மண் குவியல்; வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம்!
/
ரோட்டில் மண் குவியல்; வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம்!
ரோட்டில் மண் குவியல்; வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம்!
ரோட்டில் மண் குவியல்; வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம்!
ADDED : ஜன 15, 2024 10:05 PM

விதிமீறலால் அபாயம்
பொள்ளாச்சி நகர் பகுதியில் வாகனத்தில் அதிகளவு குப்பை ஏற்றி செல்லப்படுகிறது. மூட்டைகளாக கட்டி வைத்திருந்தாலும், குப்பையை மூடாமல் இருப்பதால் ரோட்டில் சிதறி விழுகிறது. குப்பையை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -ரஞ்சித், பொள்ளாச்சி.
வேகத்தடை தேவை
கிணத்துக்கடவு, வடசித்துார் பகுதியில் உள்ள நான்கு ரோடு சந்திப்பில் வாகனங்கள் வேகமாக சென்று வருகிறது. இதனால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த இணைப்பு சாலைகளில் வாகன விபத்தை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -மனோஜ், நெகமம்.
மீட்டர் பாக்ஸ் சேதம்
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் அருகே, ரோட்டில் இருக்கும் மின்கம்பத்தில் மீட்டர் பெட்டி சேதம் அடைந்து உள்ளது. மழை நேரத்தில் இதில் ஏதேனும் பழுது ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த மின்கம்பத்தின் சுற்றுப்புறத்தில் அதிகளவு புதர் இருப்பதால், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதர் அகற்றி, சீரமைக்க வேண்டும்.
-- -சசி, கிணத்துக்கடவு.
தெருவிளக்கு ஒளிருமா?
கிணத்துக்கடவு, அண்ணா நகர் மூன்றாவது தெருவில் உள்ள தெருவிளக்கு கடந்த இரண்டு மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் அப்பகுதியில் இருளாக உள்ளதால், அவ்வழியில் நடந்து செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இந்த தெருவிளக்கை புதிதாக மாற்றி அமைக்க வேண்டும்.
-- -நாராயணன், கிணத்துக்கடவு.
போக்குவரத்து நெரிசல்
வால்பாறை நகரில், பல இடங்களில் வாகனங்கள் ரோட்டோரத்தில் நிறுத்தப்படுகிறது. இதனால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ரோட்டில் பயணிக்கும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். போலீசார் இந்த பிரச்னையில் கவனம் செலுத்தி, நிரந்தர தீர்வு காண வேண்டும்.
- -கபிலன், வால்பாறை.
குவிந்து கிடக்கும் குப்பை
உடுமலை, ஆண்டாள் சீனிவாசன் லே-அவுட் குடியிருப்பில், குப்பை முறையாக அள்ளப்படாமல் குவிந்து கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகத்தினர் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரங்கநாதன், உடுமலை.
ரோட்டில் மண் குவியல்
உடுமலை, ராஜேந்திரா ரோட்டில் கழிவு மண் குவியலாக ரோட்டோரத்தில் கொட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் வாகனங்கள் செல்லும் போது மிகுதியான புழுதி பறப்பதால் ஒட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். விபத்து அபாயம் உள்ளதால், மண் குவியலை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செந்துார், உடுமலை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, சந்தை ரோட்டில் தள்ளுவண்டிகள் ரோட்டின் பாதி துாரம் வரை நிறுத்தப்படுகின்றன. இதனால், வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாமல், போக்குவரத்தை பாதிக்கும் வகையில் நிறுத்துகின்றனர். நாள்தோறும் அப்பகுதியில் போக்குவரத்து பிரச்னை தீராத ஒன்றாக உள்ளது.
- செந்தில்வேல், உடுமலை.
வாகன ஓட்டுநர்கள் அச்சம்
உடுமலை, பழனியாண்டவர் நகரில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. மாலை நேரங்களில் இருள் சூழ்ந்திருப்பதால், பொதுமக்கள் நடந்துசெல்லும்போது தெருநாய்களும் அச்சுறுத்தும் வகையில் துரத்தி வருகின்றன. வாகன ஓட்டுநர்களும் இதனால் அவதிப்படுகின்றனர்.
- ஜெகதீஸ், உடுமலை.
சேதமடைந்த ரோடு
மலையாண்டிபட்டிணத்தில் இருந்து கணக்கம்பாளையம் செல்லும் ரோடு குண்டும் குழியுமாகவும், ரோட்டோரத்தில் புதர் செடிகள் வளர்ந்தும் உள்ளது. மின்விளக்குகளும் இல்லாமல் இருப்பதால், இரவு நேரங்களில் அவ்வழியாக செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இந்த ரோட்டை ஊராட்சி நிர்வாகத்தினர் சீரமைக்க வேண்டும்.
- கணேஷ், உடுமலை.
அபாய நிலையில் தொட்டி
மடத்துக்குளம் ஒன்றியம், பாப்பான்குளம் கிராமத்தில், அரசுப்பள்ளி அருகிலுள்ள மேல்நிலைத்தொட்டி விரிசல் விட்டு, இடியும் நிலையில் உள்ளது. ஒன்றிய நிர்வாகத்தினர் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- ராஜ்குமார், உடுமலை.