/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விமானி பாலியல் பலாத்காரம் இன்ஜினியர் மீது வழக்கு
/
விமானி பாலியல் பலாத்காரம் இன்ஜினியர் மீது வழக்கு
ADDED : செப் 28, 2024 02:13 AM
கோவை,:கோவையைச் சேர்ந்த 35 வயது முன்னாள் விமானி. திருமணமாகாத இவர், பிரபல விமான நிறுவனத்தில் விமானியாக இருந்தார்; பின், ராஜினாமா செய்தார்.
இவருக்கும், கோவை - அவினாசி சாலையில் உள்ள 'பயனீர் அபார்ட்மென்ட்'டில் வசிக்கும் சிவில் இன்ஜினியர் ஆனந்தராஜு, 37, என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
சொந்த தொழில் செய்து வரும் ஆனந்தராஜ் ஏற்கனவே திருமணம் ஆனவர்; மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவர், அந்த பெண்ணின் தந்தையிடம், தன் மனைவியை விவாகரத்து செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், விவாகரத்து கிடைத்தவுடன் அவரது மகளை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார்.
இதை தொடர்ந்து, இருவரும் நெருக்கமாக பழகினர். அந்த பெண், 16 லட்சம் ரூபாயில் புதிய கார் வாங்க முடிவு செய்தார். அந்த பணத்தை வாங்கிய ஆனந்தராஜ், கூடுதலாக பணம் போட்டு சொகுசு கார் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
கடந்த ஜூலையில் ஆனந்தராஜ் அந்த பெண்ணை தன் வீட்டுக்கு கூட்டிச் சென்றார். திருமணம் செய்வதாக உறுதியளித்து, பாலியல் துன்புறுத்தல் செய்தார். அதை, மொபைல் போனில் வீடியோவும் எடுத்துக் கொண்டார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் கேட்டபோது, மறுத்ததோடு, ஆபாச வீடியோவை காட்டி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் என கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் புகாரின்படி, மத்திய மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.