/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி மாணவியை மீட்ட 'பிங்க்' நிற ரோந்து வாகனம்
/
கல்லுாரி மாணவியை மீட்ட 'பிங்க்' நிற ரோந்து வாகனம்
கல்லுாரி மாணவியை மீட்ட 'பிங்க்' நிற ரோந்து வாகனம்
கல்லுாரி மாணவியை மீட்ட 'பிங்க்' நிற ரோந்து வாகனம்
ADDED : நவ 18, 2025 07:27 AM
கோவை: கோவையில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே, 'பிங்க்' ரோந்து வாகனத்தில் கல்லுாரி மாணவி மீட்கப்பட்டார்.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கோவை மாநகருக்கு, ஏழு பிங்க் ரோந்து வாகனங்களை போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். துவங்கி வைக்கப்பட்ட முதல் நாளில், நள்ளிரவில் தவித்த கல்லுாரி மாணவி மீட்கப்பட்டுள்ளார்.
இதன் விவரம்:
சேலத்தை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர், பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு கோவை வந்தார். பள்ளி தோழி ஒருவரை போனில் அழைத்து விவரத்தை தெரிவித்துள்ளார். அந்த மா ணவி, உடனடியாக 'பிங்க்' ரோந்து வாகனத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
சிறப்பு எஸ்.ஐ., கவிதா தலைமையிலான பிங்க் ரோந்து வாகன போலீசார், மாணவி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, நள்ளிரவு, 12:00 மணியளவில் மீட்டனர். பெற்றோருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் நேற்று காலை கோவை, காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் வந்து மகளை அழைத்து சென்றனர். பெற்றோருக்கும், அந்த மாணவிக்கும் போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

