/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய் உடைப்பு; கார் ஒர்க் ஷாப்பில் புகுந்த தண்ணீர்
/
குழாய் உடைப்பு; கார் ஒர்க் ஷாப்பில் புகுந்த தண்ணீர்
குழாய் உடைப்பு; கார் ஒர்க் ஷாப்பில் புகுந்த தண்ணீர்
குழாய் உடைப்பு; கார் ஒர்க் ஷாப்பில் புகுந்த தண்ணீர்
ADDED : ஜன 19, 2024 11:28 PM

மேட்டுப்பாளையம்;குடிநீர் குழாய் உடைந்து, பூமிக்கு அடியில் வெளியேறும் தண்ணீர், கார் ஒர்க் ஷாப்புக்குள் புகுந்து, குளம் போல் தேங்கியுள்ளது.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் எடுக்கப்படும் தண்ணீர், திருப்பூர், அன்னூர், அவிநாசி, அனுப்பர்பாளையம் மற்றும் வழியோர கிராமங்களுக்கு, குடிநீர் விநியோகம் செய்ய, குழாய் வழியாக அனுப்பப்படுகிறது.
தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில், தீயணைப்பு நிலையம் அருகே, காபி ஒர்க் ஷாப் என்னும் இடத்தில், தாழ்வான பகுதியில் குடோன்கள் உள்ளன. இதில் ஒரு குடோனில் தனியார் கம்பெனி கார் ஒர்க் ஷாப் உள்ளது.
நேற்று காலை இந்த கார் ஒர்க் ஷாப் அருகே, அன்னூர் சாலையில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் குழாயிலிருந்து வெளியேறும் தண்ணீர், அழுத்தம் காரணமாக, ஒர்க் ஷாப் உள்ளே ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், தண்ணீர் பீச்சி அடித்தது. இதை பார்த்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில், ஒர்க் ஷாப் முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் கார்களை பழுது நீக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள், மேட்டுப்பாளையத்தில் நாளை (இன்று) மின்தடை உள்ளதால், குழாய் உடைப்பை, நாளை (இன்று) தான் சரி செய்ய முடியும் என கூறியுள்ளனர்.
நீரின் அழுத்தம் காரணமாக தொடர்ந்து ஒர்க் ஷாப்பின் உள்ளே தண்ணீர் அதிகமாக வருவதால், பணியாளர்கள் மின்மோட்டார் வாயிலாக தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.