/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாயால் விபத்து அபாயம்: பணியை விரைந்து முடியுங்க
/
குழாயால் விபத்து அபாயம்: பணியை விரைந்து முடியுங்க
ADDED : அக் 29, 2025 11:44 PM

நெகமம்:  வடசித்தூர் -- காட்டம்பட்டி ரோட்டோரம் வைக்கப்பட்டுள்ள காஸ் குழாயால் விபத்து அபாயம் உள்ளது.
வடசித்தூர் --- காட்டம்பட்டி ரோட்டில் தினமும், வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள், விவசாயிகள் என, பலர் பயணிக்கின்றனர். இந்த ரோட்டின் ஓரத்தில் காஸ் கொண்டு செல்வதற்கு பதிப்பதற்காக, பெரிய அளவிலான குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழாயில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படாமல் இருக்க குழாயில் ஒளிரும் ஸ்டிக்கர் உள்ளது. ஆனால் ஒரு சில குழாயில் கவர்களால் மூடாமல் திறந்து நிலையில் உள்ளது. ரோட்டின் வளைவு பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் இரவு நேரத்தில் வளைவில் திரும்பும் வாகனங்கள், குழாயில் மோதி விபத்துக்கு உள்ளாகும். எனவே, அனைத்து குழாய்களின் முனைகளிலும் ஒளிபிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும். மேலும், குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

