sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் வேகமாக இலக்கை முடிக்க திட்டம்

/

 நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் வேகமாக இலக்கை முடிக்க திட்டம்

 நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் வேகமாக இலக்கை முடிக்க திட்டம்

 நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் வேகமாக இலக்கை முடிக்க திட்டம்


ADDED : ஜன 23, 2026 05:06 AM

Google News

ADDED : ஜன 23, 2026 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஆகஸ்ட் 2 முதல் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்து நடத்தப்பட்டு வருகிறது.

கோவைக்கு 40 முகாம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், பெண்கள், ஆண்கள், கர்ப்பிணிகளுக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. நேற்று வரை, 30முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு முகாமிலும், 17 சிறப்பு மருத்துவர் குழு பரிசோதனை செய்கிறது. தேர்தல் நெருங்குவதால், முகாம்களை வேகமாக நடத்தி முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் சனிக்கிழமை மட்டும் நடத்தியதை மாற்றி, வாரம் இரண்டு, மூன்று நாட்கள் முகாம் நடத்த தொடங்கியுள்ளனர்.

மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் பாலுச்சாமி, '' கோவையில் இதுவரை 30 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 10 முகாம்கள் பிப். இரண்டாம் வாரத்திற்குள் நடத்தி முடிக்கப்படும். இதுவரை 56,676 பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர்'' என்றார்.






      Dinamalar
      Follow us