/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்காச்சோள சாகுபடி பரப்பு அதிகப்படுத்த திட்டம்
/
மக்காச்சோள சாகுபடி பரப்பு அதிகப்படுத்த திட்டம்
ADDED : ஜூன் 23, 2025 10:50 PM
மடத்துக்குளம்; மக்காச்சோள சாகுபடியில் விளைச்சலை அதிகரிப்பது குறித்து வேளாண்துறை சார்பில், செய்முறை விளக்கப்பயிற்சி, ஜோத்தம்பட்டி கிராமத்தில் நடந்தது.
பயிற்சியில் வேளாண்துறையினர் கூறியதாவது: மடத்துக்குளம், உடுமலை, குடிமங்கலம் மற்றும் தாராபுரம் வட்டாரத்தில் அதிகளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மக்காச்சோளம் அபிவிருத்திக்காக, மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன், செயல் விளக்கத்திடல், ஒட்டு ரக விதை வினியோகம், நுண்ணுாட்டச்சத்து, உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் காரணிகள் ஆகியவை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகிறது.
செயல் விளக்கத்திடல்கள் அமைத்து, நவீன விவசாய தொழில்நுட்பங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையில், மடத்துக்குளம் பகுதியில், 25 செயல் விளக்கத்திடல்கள், திடல் ஒன்றுக்கு, 6,000 ரூபாய் மானிய அடிப்படையில் விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்டச்சத்துகள், உயிரியில் காரணிகள் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர். தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன், செயல் விளக்கத்துடன் பயிற்சி வழங்கினார்.