/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுதானிய உற்பத்தி அதிகரிக்க திட்டம்
/
சிறுதானிய உற்பத்தி அதிகரிக்க திட்டம்
ADDED : ஜூலை 10, 2025 09:58 PM
உடுமலை; பயறுவகை, சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள் மற்றும் பருத்தி பயிரில் சாகுபடியை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் பொருட்டு, பயறுவகை, தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் செயல் விளக்கம், புதிய ரகங்களுக்கு உற்பத்தி மற்றும் வினியோக மானியம், நுண்ணுாட்டச்சத்து, உயிர் உரங்கள், உயிரியியல் காரணிகள், உயிரியியல் பூச்சி மருந்து, அங்கக உரம், தார்பாலின், நானோ யூரியா, விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் மர வேம்பு பயிர் நடவு இனங்களில் மானிய உதவி வழங்கப்படுகிறது.
தாராபுரத்தில் நடப்பாண்டு, பயறு வகை, தானியங்கள், ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்கள் மற்றும் நிலக்கடலை பயிர்களில் சாகுபடி பரப்பை அதிகரிக்க, விளைச்சலை பெருக்க, வரப்பெற்றுள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டார விவசாயிகள் இத்திட்டங்களின் கீழ் பயன்பெறலாம், என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.