/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்தையாற்று பாலம் கட்டும் பணி அக்டோபருக்குள் முடிக்க திட்டம்
/
காந்தையாற்று பாலம் கட்டும் பணி அக்டோபருக்குள் முடிக்க திட்டம்
காந்தையாற்று பாலம் கட்டும் பணி அக்டோபருக்குள் முடிக்க திட்டம்
காந்தையாற்று பாலம் கட்டும் பணி அக்டோபருக்குள் முடிக்க திட்டம்
ADDED : பிப் 17, 2025 10:44 PM
மேட்டுப்பாளையம்; காந்தையாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட, 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த, 2023ம் ஆண்டு உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் துவங்கின. இரண்டு ஆண்டுகளில் பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் ஆகியும், பாதி பணி கூட முடியவில்லை. பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் (பாலம் கட்டு மானங்கள்) குருமூர்த்தி கூறியதாவது: காந்தையாற்றின் குறுக்கே இதுவரை, 58 சதவீதம் பணிகள் நடைபெற்றுள்ளன.
கடந்தாண்டு ஜூலை மாதம் பெய்த கனமழையால் காந்தையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் தேங்கியது.
இதனால் பாலம் கட்டும் பணிகள் கடந்த ஆறு மாதங்களாக தடைபட்டன.
தற்போது, ஆற்றில் தண்ணீர் குறைந்துள்ளது இன்று முதல் (நேற்று) மீண்டும் பணிகள் துவங்கியுள்ளன. இரண்டு இடங்களில் பில்லர்களுக்கு இடையே கான்கிரீட் டெக் போடும் பணி நடக்கிறது.
பாலத்தின் இரண்டு பக்கம் பாதியில் நிற்கும் தடுப்பு சுவரை கட்டும் பணிகளும் விரைவில் துவங்கப்படும். வருகிற அக்டோபர் மாதத்திற்குள் பாலம் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கோட்ட பொறியாளர் கூறினார்.