/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்று ஏக்கரில், 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி
/
மூன்று ஏக்கரில், 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி
ADDED : டிச 03, 2024 06:39 AM

கருமத்தம்பட்டி; கிட்டாம் பாளையம் ஊராட்சியில், வாசவி வனத்தில், மூன்று ஏக்கரில், 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
கிட்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள கூட்டுறவு தொழிற்பேட்டையில், ஊராட்சிக்கு சொந்தமான, மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு, வாசவி வனம் உருவாக்கப்பட்டு, மியாவாக்கி முறையில், 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் சந்திர சேகர், சிறு துளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன், கோவை ஆரிய வைத்திய சமாஜ தலைவர் விஜயகுமார், ரோட்டரி கவர்னர் சத்தியநாராயணன் ஆகியோர் மரக்கன்றுகளை நடவு செய்து, பணியை துவக்கி வைத்தனர்.
மரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல், அதை பாதுகாப்பதும், பராமரிப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும், என, வலியுறுத்தப்பட்டது. வாசவி கிளப் உறுப்பினர்கள், சிறுதுளி, ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.