/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காங்கயம்பாளையத்தில் பழ மரக்கன்றுகள் நடவு
/
காங்கயம்பாளையத்தில் பழ மரக்கன்றுகள் நடவு
ADDED : டிச 15, 2024 11:37 PM
சூலுார்; காங்கயம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, பூங்காவில், பழ மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது.
சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட காங்கயம்பாளையம் ஊராட்சி, எலன் நகரில் உள்ள பூங்காவின் ஒரு பகுதியில் பலன் தரும் மரங்கள், நிழல் தரும் மரங்கள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன. மீதமுள்ள பகுதியில் பழ மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் கிராந்தி குமார் துவக்கி வைத்தார்.கொய்யா, பப்பாளி,மாதுளை, சீதா, மா உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
மரகன்றுகளை நடவு செய்து, மூன்று பூங்காக்களை பராமரித்து வரும் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் ஜோட்டி குரியனை, கலெக்டர் பாராட்டினார்.
சூலுார் தாசில்தார் தனசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜ், காங்கயம் பாளையம் ஊராட்சி துணைத்தலைவர் மகேஸ்வரி, வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

