/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச சுற்றுச்சூழல் தினம் 5,000 மரக்கன்றுகள் நடவு
/
சர்வதேச சுற்றுச்சூழல் தினம் 5,000 மரக்கன்றுகள் நடவு
சர்வதேச சுற்றுச்சூழல் தினம் 5,000 மரக்கன்றுகள் நடவு
சர்வதேச சுற்றுச்சூழல் தினம் 5,000 மரக்கன்றுகள் நடவு
ADDED : ஜூன் 06, 2025 06:11 AM

கோவை; சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி செட்டிபாளையம் ஓராட்டு குப்பை பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கோவை மாவட்ட கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்கம், மாவட்ட கனிமவளம் மற்றும் புவியியல் துறை சார்பில் செட்டிபாளையம், ஓராட்டு குப்பை பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.
இதில், மாவட்ட கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, மாவட்ட கனிம வளம் மற்றும் புவியியல் துறை துணை இயக்குனர் பன்னீர்செல்வம், கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் சின்னசாமி, மாவட்ட தலைவர் சந்திர பிரகாஷ் உள்ளிட்டோர் மரங்கள் நடவு செய்தனர்.
மா, வேம்பு உட்பட, 30 வகையான, 3,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மேட்டுப்பாளையத்தில், 2,000 மரக்கன்றுகள் உட்பட மாவட்டத்தில், 5,000 மரக்கன்றுகள் நடப்பட்டதாக மாவட்ட கனிம வள அதிகாரிகள் தெரிவித்தனர்.