நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருமத்தம்பட்டி : ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை சார்பில், கணியூர் ஊராட்சியில் பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலும், பெண் குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
நடப்பாண்டில், கணியூர் ஊராட்சியில் பிறந்த, பெண் குழந்தைகளுடன், அவர்களது தாய்மார்கள், 34 பேர் பங்கேற்று, தங்கள் குழந்தைகளின் பெயரில், மூலிகை வனத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தனர். கலெக்டர் கிராந்திகுமார், கூடுதல் ஆட்சியர் ஸ்வேதா சுமன், கணியூர் ஊராட்சி தலைவர் வேலுசாமி உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நடவு செய்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.