/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வன மஹோத்சவத்துக்கு மரக்கன்றுகள் நடவு
/
வன மஹோத்சவத்துக்கு மரக்கன்றுகள் நடவு
ADDED : ஜூலை 08, 2025 10:00 PM
தொண்டாமுத்தூர்; காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், வன மஹோத்சவத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நம் நாட்டில், பொதுமக்கள் மத்தியில் வனங்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மரங்கள் வளர்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம், 'வன மஹோத்சவ விழா' கொண்டாடப்படுகிறது. அதன்படி, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், ஆண்டு தோறும், வன மஹோத்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு வன மஹோத்சவத்தையொட்டி, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டத்தின் வாயிலாக, தமிழகத்தில், மொத்தம் 55 கிராமங்களில், 303 அரச மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
மரம் சார்ந்த விவசாயம் திட்டத்தின் வாயிலாக , 155 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிம்பர் மரங்கள் நடவு செய்யப்பட்டன.