/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையை மறைக்கும் செடிகள்: வாகன ஓ ட்டுநர்கள் திணறல்
/
சாலையை மறைக்கும் செடிகள்: வாகன ஓ ட்டுநர்கள் திணறல்
சாலையை மறைக்கும் செடிகள்: வாகன ஓ ட்டுநர்கள் திணறல்
சாலையை மறைக்கும் செடிகள்: வாகன ஓ ட்டுநர்கள் திணறல்
ADDED : ஜூன் 26, 2025 09:43 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், கிராமப்புற சாலைகளை மறைத்து நிற்கும் செடி, கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த சில வாரங்களாக, தொடர் மழை பெய்கிறது. இதனால், செடி, கொடிகள் வளர்ந்து, புதர்மண்டி காணப்படுகின்றன. சில பகுதிகளில், சாலையை மறைக்கும் வகையில் செடிகள் படர்ந்துள்ளன.
குறிப்பாக, சந்திராபுரம், கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், தேவம்பாடிவலசு உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையின் ஓரம், புதர் மண்டி காணப்படுகிறது. ஒரு வாகனம் சென்றால், எதிரே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் திணறுகின்றனர். எனவே, சாலையை ஆக்கிரமித்துள்ள செடி, கொடி மற்றும் முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.