/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கல்லுாரி நுழைவுவாயிலில் பிளக்ஸ்: அப்புறப்படுத்த வலியுறுத்தல்
/
அரசு கல்லுாரி நுழைவுவாயிலில் பிளக்ஸ்: அப்புறப்படுத்த வலியுறுத்தல்
அரசு கல்லுாரி நுழைவுவாயிலில் பிளக்ஸ்: அப்புறப்படுத்த வலியுறுத்தல்
அரசு கல்லுாரி நுழைவுவாயிலில் பிளக்ஸ்: அப்புறப்படுத்த வலியுறுத்தல்
ADDED : செப் 09, 2025 09:58 PM

வால்பாறை; வால்பாறை அரசு கல்லுாரி நுழைவுவாயிலில் விதிமுறையை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகரம் ஒரு கி.மீ., சுற்றளவில் அமைந்துள்ளது. சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறையில் ரோடும் மிகவும் குறுகலாக உள்ளது. வால்பாறை நகரில் சமீப காலமாக பல்வேறு அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்.
தடையை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற துறை சார்ந்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதால், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்டேன்மோர் சந்திப்பில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நுழைவுவாயிலில், மாணவர்கள் நடந்து செல்லக்கூட வழியில்லாத வகையில், பிளக்ஸ் பேனர்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
வால்பாறை நகரில் சமீப காலமாக, அரசு விழா மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கின்றனர். காந்திசிலை, அண்ணாசிலை, பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நுழைவுவாயிலின் முன்பும் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை அகற்ற போலீசார்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.